ஷில்பா ஷெட்டியின் நட்சத்திர ஹோட்டலை இழுத்து மூடியதன் பின்னணி என்ன?

ஷில்பா ஷெட்டியின் நட்சத்திர ஹோட்டலை இழுத்து மூடியதன் பின்னணி என்ன?

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாகவும், வெற்றிகரமான தொழில் அதிபராகவும் வலம் வரும் ஷில்பா ஷெட்டி, திடீரென தனது ‘பஸ்டியன்’ நட்சத்திர ஹோட்டலை மூடியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது ரூ. 60 கோடி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நட்சத்திர ஹோட்டல் மூடப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்கள் விரும்பிய இடம்!

2016-ஆம் ஆண்டில் ஷில்பா ஷெட்டியால் தொடங்கப்பட்ட ‘பஸ்டியன்’, மும்பையின் பிரபல நட்சத்திர ஹோட்டலாக திகழ்ந்தது. அதன் ஆடம்பர வடிவமைப்பு மற்றும் சுவையான உணவுக்காக மலாலா அரோரா, ஜான்வி கபூர், கத்ரீனா கைஃப், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் போன்ற முன்னணி பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தனர்.

மோசடி வழக்கு!

ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் தொழிலதிபர் தீபக் கோத்தாரியிடம் இருந்து சுமார் ரூ. 60 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2015-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ‘பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

திடீர் மூடுவிழா ஏன்?

மோசடி வழக்குகளால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே இந்த ஹோட்டல் மூடப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், ஹோட்டல் நிர்வாகமோ, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறிவருகிறது.

அதே சமயம், “பஸ்டியன் பாந்த்ரா விடைபெற்றாலும், இந்த பிராண்டின் கீழ் மேலும் இரண்டு புதிய கிளைகள் திறக்கப்பட உள்ளன” என்று பஸ்டியன் தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித் பிந்த்ரா கூறியிருப்பது, இந்த மூடுவிழா விவகாரத்தில் மேலும் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையின் எதிர்காலம் என்ன?

பட வாய்ப்புகள் குறைந்து, 2009-ல் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவைத் திருமணம் செய்துகொண்ட ஷில்பா ஷெட்டி, இப்போது இப்படி ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடி வழக்கின் முடிவு என்னவாக இருக்கும்? ஷில்பா ஷெட்டியின் தொழில் வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.