நிறைமாத நிலவே வாவா… கர்ப்பிணியாக தீபிகா படுகோன் – அழகான போட்டோஸ்!

நிறைமாத நிலவே வாவா… கர்ப்பிணியாக தீபிகா படுகோன் – அழகான போட்டோஸ்!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் கொண்டிருக்கும் நடிகை தீபிகா படுகோன் முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார். தற்போது இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மிக உச்சத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் நடிகை தீபிகா படுகோன்.

38 வயதாகும் இவர் தொடர்ச்சியாக தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு இன்றும் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பிரபல நட்சத்திர ஹீரோவான நடிகர் ரன்வீர் சிங்கை கடந்த 2018ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் திருமணம் செய்து கொண்டார்.

மேலும், சமீபத்தில் இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். வரும் செப்டம்பர் மாதம் தீபிகாவுக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இந்நிலையில் தற்ப்போது பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் கல்கி படத்தில் தீபிகா கதாநாயகியாக நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தனது கர்ப்பம் குறித்து பேசிய தீபிகா, பிரசவத்தை நினைத்து நான் மிகவும் பயத்துடனே இருக்கின்றேன். வீட்டில் அம்மா சமைத்ததை சாப்பிட்டுகொண்டு இருக்கின்றேன் எனக் கூறியிருந்தார்.