தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ் சினிமாவில் தற்போதைய நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு மேலாக இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் இருவரும் தங்களது கெரியரில் ஒருவருக்கொருவர் மிக முக்கிய பங்காளிகளாக இருந்து வந்துள்ளனர்.

இதனிடையே இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனித்தனியே வாழ போவதாக முடிவு எடுத்து பிரிந்து விட்டார்கள் தனித்தனியே வாழ்ந்து வந்த இவர்கள் தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என குடும்ப நல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி தனுஷ் – ஐஸ்வர்யா இருவரையும் நேரில் வரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருக்கிறார். எனவே அக்டோபர் 7ம் தேதி இந்த வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.