இப்படி பண்ணிடீங்களே? ரகசிய திருமணம் செய்துக்கொண்ட நடிகர் சித்தார்த்!

இப்படி பண்ணிடீங்களே? ரகசிய திருமணம் செய்துக்கொண்ட நடிகர் சித்தார்த்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் தான் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆயுத எழுத்து , காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.எச் 4 , தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக சித்தா என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்தார். இதனிடையே இவர் பிரபல நடிகையான அதிதி ராவ் உடன் ரகசியமாக பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் சித்தார்த் அதிதி ராவ் ஹைதாரியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியாகி தீயாக பரவி வருகிறது.

இவர்கள் இருவரும் தெலங்கானா மாநிலம், வனபர்தி மாவட்டம், ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோவிலில் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக டோலிவுட் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சித்தார்த் ஏற்கனவே மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்த நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதேபோல் அதிதியும் சத்யதீப் மிஷ்ரா என்பவரை தனது 21 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது சித்தார்த் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் மறுமணம் செய்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.