“புஷ்பா 2” வில்லன் பகத் பாசிலின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புஷ்பா 2” வில்லன் பகத் பாசிலின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

டோலிவுட்டில் மாபெரும் ஹிட் அடித்து வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் “புஷ்பா” தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியான இப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இவர்களுடன் பகத் பாசில், பிரகாஷ்ராஜ்,சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் உலகம் முழுக்க 373 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் புஷ்பா 2 படத்திற்காக பகத் பாசில் ஒரு நாளைக்கு 12 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம். புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் பல நாட்கள் எடுத்த நிலையில் பகத் பாசில் ஒரு நாள் சம்பள முறைக்கு மாறிவிட்டாராம்.