பாதர் காஸ்பரின் அடையாள அட்டையை ஆட்டையைப் போட்டு லக்னோவில் நடந்த விபரீதம் !

பாதர் காஸ்பரின் அடையாள அட்டையை ஆட்டையைப் போட்டு லக்னோவில் நடந்த விபரீதம் !

ஆமா நான் இந்திய அரசுக்கு தான் வேலை பார்கிறேன், ஏன் என் ஆதார் (அடையாள அட்டை) காடை நான் உங்களுக்கு தரவேண்டும் என்று ரெம்பவே தெனாவட்டாக விமான நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தார் பாதர் காஸ்பர். எமது நிருபருக்கு அருகில் இருந்து இவர் பேசிக்கொண்டு இருந்தார். இலங்கைத் தமிழர்களுக்கு வழி காட்டுவதாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு விடிவை தேடிக் கொடுக்க இருப்பதாகவும் பாதர் காஸ்பர் கூறிவருகிறார்.

தான் விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கத்தில் இருந்தவர் என்றும் தன்னை அடையாளப்படுத்தி. ஆரம்ப காலத்தில் பல தில்லாலங்கடி விளையாட்டுகளை காட்டியவர் பாதர் காஸ்பர் என்பதனை எவரும் மறுக்க முடியாது. “” சாஞ்சனாவின் அனுபவம்”” என்று சொல்லி ஒரு தொடர் கதையை வெளியிட்டு. அதில் சாஞ்சனா என்ற ஈழத்துப் பெண், தனது அனுபவத்தை கூறுவதாகச் சொல்லி, இந்திய மத்திய அரசு சொன்ன விடையங்களை அதில் உள்ளே புகுத்தியவர் பாதர் காஸ்பர். இன் நிலையில் இவருக்கே யாரோ ஆப்பு வைத்து விட்டார்கள் என்பது தான் தற்போதைய ஹாட் நியூஸ் !

பாதர் காஸ்பர் அவர்களின் ஆதார் காட்டை யாரோ லக்னோ மாநிலத்தில் பாவித்து, ஒரு மோபைல் போனையும், சிம் கட்டையும் வாங்கியுள்ளார்கள். அதனைப் பாவித்து பல ஆயிரம் பேருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார்கள். இதனை கண்டறிந்த டெலிகொம் நிறுவனம், பாதர் காஸ்பருக்கு அழைப்பை விடுக்க, உடனே அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விதம்… நான் இந்திய அரசுக்காக வேலை செய்யும் நபர் என்பது தான் !

இவரை இன்னும் சிலர் நம்பி வருகிறார்கள். மக்களே ஜாக்கிரதை !…..