10 படிக்கும்போதே அப்பா நடந்துக்கொண்ட விதம்….. மோசமான அனுபவத்தை பகிர்ந்த கேபிரில்லா!

10 படிக்கும்போதே அப்பா நடந்துக்கொண்ட விதம்….. மோசமான அனுபவத்தை பகிர்ந்த கேபிரில்லா!

தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளிவான 3 திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எல்லோரது கவனத்தையும் இழுத்தவர்தான் நடிகை கேப்ரில்லா. இவர் அந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து அசத்திருந்தார்.

இவரது ரோல் மிக அழுத்தமானதாக அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும். முன்னதாக இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிகளில் நடனமாடியும் பேமஸ் ஆகியிருந்தார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேபிரில்லாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

ஆனால், அவர் சீரியல்களில் தலை காட்ட ஆரம்பித்து ஈரமான ரோஜாவே சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்த சீரியல அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர், நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய அப்பா வாங்கிக்கொடுத்த ஷார்ட்டான ஆடை அணிந்ததாள் பலர் என்னை மோசமாக விமர்சித்தனர். அந்த சமயத்தில் என்னிடம் மொபைல் இல்லை.அதிகம் படிப்பில் கவனம் செலுத்தினேன். அப்போது என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்துவிட்டனர்.

அந்த புகைப்படத்தில் இருந்தது நான் இல்லை. ஒருவேளை நானா இருக்குமோன்னு தோன்றும் அளவிற்கு அந்த புகைப்படம் என்னை போல் இருந்தது. இந்த சம்பவம் என்னை ரொம்ப பாதித்து. 3 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை.. பள்ளியில் என்னை அப்படி பார்த்தார்கள். அந்த சமயங்களில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று கேப்பிரில்ல தெரிவித்துள்ளார்.