தமிழ் சினிமாவில் எதார்த்தமான ஆக்சன் படங்களுக்குப் பெயர் போன இயக்குநர் விஜய் மில்டன், தனது ‘கோலி சோடா’ திரைப்படத்தின் ரத்தமும் சதையுமான உலகத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வருகிறார். ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ (Gods and Soldiers) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ‘ட்ரைசர்’ (Teaser + Trailer) தற்போது வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகிறது. பள்ளிச் சிறுவர்கள் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், அவர்கள் வளர வளர ஒரு மிகப்பெரிய நிழல் உலகக் குற்றப் பின்னணியில் சிக்கித் தவிப்பதையும் மிகவும் ரா மற்றும் கிரிட்டியாக (Raw and Gritty) இந்தப் படம் பேசப்போகிறது என்பதை ட்ரைசர் உறுதிப்படுத்தியுள்ளது.
விஜய் மில்டனின் முந்தைய ‘கோலி சோடா’ படங்கள் போலவே, இந்தப் படமும் எளிய மனிதர்களின் போராட்டம் மற்றும் வாழ்வியலை வன்முறை கலந்த எதார்த்தத்துடன் சித்தரிக்கிறது. இதில் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் அதிரடி போலீஸ் அதிகாரியாக மிரட்டுகிறார். மேலும், தெலுங்கு நடிகர் ராஜ் தருண், சுனில், பரத், கிஷோர் மற்றும் அம்மு அபிராமி என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் இணைந்துள்ளது. குறிப்பாக, ‘வேடன்’ இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவதுடன் பாடலையும் பாடியுள்ளார். பிரபல ராப் கலைஞர் ‘பால் டப்பா’ இந்தப் படத்தின் மூலம் நடிகராகத் தடம் பதிக்கிறார்.
விஜய் மில்டன் இந்தப் படத்திற்குத் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன், ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்புப் பணிகளையும் கவனித்துள்ளார். சாம் சி.எஸ்-ஸின் மிரட்டலான பின்னணி இசை ட்ரைசருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், ‘கோலி சோடா’ ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.