என்னை அடிமையாக வைத்திருந்தார்கள்… ஜிவி பிரகாஷ் பளீச்!

என்னை அடிமையாக வைத்திருந்தார்கள்… ஜிவி பிரகாஷ் பளீச்!

தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளர் ஆன ஜீவி பிரகாஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வெயில் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பொல்லாதவன், கிரீடம், சேவல், அங்காடித்தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, தாண்டவம், உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இதனிடையே தனது பள்ளி தோழியான சைந்தவியை காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அன்வி என்ற ஒரு மகள் ஒரு பெண் குழந்தை பிறந்தார் குடும்பம், குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் சைந்தவி ஜீவி பிரகாஷ் ஜோடி திடீரென விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் பிரபல இயக்குனர் செல்வராகவன் உடன் பணியாற்றிய அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருப்பது தற்ப்போது வைரலாகி வருகிறது. அதாவது, ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சமயத்தில் ஸ்டுடியோவில் என்னை அடிமையாக வைத்து இருந்தார்கள். நான் 4 நாள் ஸ்டுடியோலையே இருந்தேன். செல்வராகவனும் போக மாட்டார், தயவு செய்து போங்க நான் வாசிச்சு வைக்கிறேன் என்று சொல்லுவேன். மயக்கம் என்ன படத்தின் சமயத்திலும் இப்படி தான் செய்தார் என்று ஜிவி பிரகாஷ் கலகலப்பாக பேசியுள்ளார்.