புஷ்பா பாடலுக்கு ஹன்சிகா போட்ட ஆட்டம்… அசந்துப்போன அல்லு அர்ஜுன் – வீடியோ!

புஷ்பா பாடலுக்கு ஹன்சிகா போட்ட ஆட்டம்… அசந்துப்போன அல்லு அர்ஜுன் – வீடியோ!

இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கு குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது புஷ்பா 2 பாடலுக்கு ஹன்சிகா தாவணியில் கியூட்டாக டான்ஸ் ஆடி இருக்கிறார். இதில் ராஷ்மிகாவை விட இவரது டான்ஸ் கியூட்டாக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அத்துடன் அல்லு அர்ஜுன் ஹன்சிகாவின் நடனத்திற்கு ஹார்டின் போட்டு கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ: