4 பேரையும் தூக்கி சிறையில் அடைத்த சுவிஸ் நீதிபதி 37பில்லியன் சொத்து மதிப்பு ஆனால் களி தின்ன வேண்டிய நிலை

4 பேரையும் தூக்கி சிறையில் அடைத்த சுவிஸ் நீதிபதி 37பில்லியன் சொத்து மதிப்பு ஆனால் களி தின்ன வேண்டிய நிலை

பிரித்தானியாவின் 4வது பெரும் பணக்கார குடும்பம் ஹிந்துஜா என்னும் குடும்பம். இவர்கள் இந்திய வம்சாவழியினர். இந்தியாவில் அஷோக் லியா லான், வாகன உற்பத்தி என்று ஆரம்பித்த இவர்கள், ஈரானில் எண்ணைக் கிணறுகளை வாங்கிக் குவித்து பெரும் பணத்தை சம்பாதித்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் இவர்களிடம் உள்ளது. சுமார் 2 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். பிரித்தானியாவில் இருந்து இயங்கி வந்த ஹிந்துஜா குடும்ப முக்கிய உறுப்பினரான, பிரகாஷ் ஹிந்துஜா, சுவிஸ் நாட்டில் சொந்தமாக ஒரு வங்கியை ஆரம்பித்து மேலும் பல பில்லியன் டாலர்களை சம்பாதித்து வந்தார். இன் நிலையில்,

அவர்கள் சுவிஸ் ஜெனீவாவில் ஒரு ஆடம்பர வில்லா(Holiday House) ஒன்றை வைத்திருந்தார்கள். அங்கே வேலைக்கு இந்தியர்களைக் கொண்டு வந்து அடிமைகளாக வேலை செய்ய வைத்துள்ளார்கள். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் அந்த வேலை ஆட்கள் வேலை செய்ய வேண்டும். அதுமட்டும் அல்ல அவர்களின் சம்பளம் சுவிஸ் பிராங்கில் இல்லையாம். வெறும் இந்திய ரூபாயில் கொடுத்துள்ளார்கள். இதனை எப்படியோ மோந்து பிடித்த சுவிஸ் பொலிசார், பிரகாஷ் ஹிந்துஜா மீது வழகை தொடுத்தது மட்டுமல்லாது, அவரது மனைவி பிள்ளை மற்றும் மருமகள் என்று 4 பேரின் மீதும் குற்றச்சாட்டை சுமத்தினார்கள்.

உலகின் அதி சக்த்தி வாய்ந்த பல, வழக்கறிஞர்கள் இந்த வழக்கை வாதாடவும் உதவவும் போடப்பட்டார்கள். அமெரிக்காவில் இருந்து, மற்றும் பிரித்தானியாவில் இருந்து பல, முக்கிய வழக்கறிஞர்கள் பல வகைகளில் ஹிந்துஜாவுக்கு ஆதரவாக வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில். நேற்று(வெள்ளிக்கிழமை) சுவிஸ் நீதிபதிகள் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அதாவது 4 பேருக்கும் 4 வருட சிறைத் தண்டனை என்று அறிவித்த அடுத்த கணமே பொலிசார் அவர்களை கைதுசெய்து சிறைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். பிரித்தானியாவாக இருந்தால் இவர்கள் இலகுவாக வெளியே வந்து இருப்பார்கள். காரணம் பிரித்தானிய அரச குடும்பத்திற்கே பணத்தை வாரி வாரி இறைத்தவர் பிரகாஷ் ஹிந்துஜா. அதுமட்டும் அல்ல, மன்னர் சார்ளசின் சகோதரி ANN அவர்களின் உற்ற நண்பரும் கூட.

ஆனால் இந்தப் பாச்சா எல்லாம் சுவிஸ் நாட்டில் பலிக்குமா ? இல்லை . இவர்கள் 4ல்வரும் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. காரணம் இதனை எதிர்த்து மேன் முறையீடு செய்ய முடியுமா என்பதே சந்தேகம். 30 பில்லியன் டாலர் (அதாவது 3000மில்லியன் டாலர்களுக்கு) சொந்தக் காரர்கள். ஆனால் இன்று சிறையில் களி தின்னவேண்டிய நிலை. காசு ஆசை மனிதர்களை எப்படி எல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று பார்த்தீர்களா ? செல்வந்தர்களுக்குத் தான் பணத்தின் மேல் அவ்வளவு ஆசை. சாதாரண மனிதர்கள், மனித நேயத்தோடு தான் வாழ்கிறார்கள்.

athirvu