சிம்புவுக்கு திருமணம்… சீரியல் நடிகை சொன்ன விஷயத்தை கேளுங்க!

சிம்புவுக்கு திருமணம்… சீரியல் நடிகை சொன்ன விஷயத்தை கேளுங்க!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவான நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே பல்வேறு திரைப்படங்களில் நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என பிரபலமானார். தந்தை டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக திரையில் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

குழந்தையாக நடித்து ஒட்டுமொத்த மக்களின் மனதை கவர்ந்தார். அதை எடுத்து முதல் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் அழிவதில்லை திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆன சிம்பு தொடர்ச்சியாக மன்மதன், அலை ,கோவில்,விண்ணைத்தாண்டி வருவாயா, வல்லவன் , வானம், ஒஸ்தி, இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

தற்போது 41 வயதாகும் சிம்பு இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். சிம்புவின் திருமணம் நடக்குமா நடக்காதா? என்ற ஒரு கேள்வி ரசிகர்களுக்குள்ளே பெரும் குழப்பமாக இருந்து வரும் நேரத்தில் தற்போது பிரபல சீரியல் நடிகையான ரேமா அசோக் தனது சமூக வலைதளத்தில் சிம்புவுக்கு திருமணம் ஆகும்போது தான் எனக்கு திருமணம் ஆகும் எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.ரேமா கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, நாச்சியார்புரம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.