இந்தியன் 2 ஜூலை 12 வெளியாகும் ஆனால் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை

இந்தியன் 2 ஜூலை 12 வெளியாகும் ஆனால் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை

நேற்றைய தினம்(ஜூலை 1) இந்தியன் 2 படம், சென்சாருக்கு சென்றுள்ளது. அதனை அதிகாரிகள் பார்த்து நேற்றைய தினமே சான்றிதழை வழங்கி விட்டார்கள். ஆனாலும் ஜூலை மாதம் 12 இந்தியன் 2 வெளியாகுமா இல்லையா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில போஸ்டர்களில் ஜூலை 12 என்று போடப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகை விளம்பரங்களில், எந்த ஒரு திகதியையும் அறிவிக்கவில்லை என்று மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள்.

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைக்கா இந்தியன் 2 படத்தை எடுத்துள்ளது. கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இந்திய 2 படம், கதை மிக மிக த்ரில் ஆன கதை என்று கூறப்படுகிறது. எல்லாக் காட்சிகளுமே மிகவும் பரபரப்பாக அமைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில். மக்கள் மத்தியில் இந்தியன் 2 படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.