“இந்தியன் 2” படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் ரிலீஸ்…

“இந்தியன் 2” படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் ரிலீஸ்…

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்பாளினியான இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி , செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் அப்பா மகனாக நடித்திருந்த கமலஹாசன் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் அவரது மகன் சந்துருவாகவும் கமல்ஹாசன் நடித்து மிரட்டி இருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மாபெரும் சாதனை படைத்த படமாக அப்போதே பார்க்கப்பட்டது. இப்படம் அந்த காலத்தில் அதாவது 1996 ஆம் ஆண்டு வெளிவந்து கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

அந்த காலத்தில் அவ்வளவு பெரிய வசூல் ஈட்டிய படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தியன் சினிமாவில் சரித்திரம் படைத்தது “இந்தியன்” திரைப்படம். அதன் தொடர்ச்சியாக ” இந்தியன் 2 ‘ இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலெர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .