“இந்தியன் 2” படத்தில் கமலுக்கே ஆட்டம் கொடுக்க போகும் நடிகர் – சுவாரஸ்ய தகவல்!

“இந்தியன் 2” படத்தில் கமலுக்கே ஆட்டம் கொடுக்க போகும் நடிகர் – சுவாரஸ்ய தகவல்!

கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இன்று வரை முத்திரை பதித்திருக்கும் திரைப்படம் தான் இந்தியன். இந்த திரைப்படத்தில் லஞ்சத்தை ஒழிப்பது தான் அவரது முக்கிய நோக்கமே. பெரும்பாலான அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை வாங்கிக் கொண்டு லஞ்சம் வாங்கிக் கொண்டு ஊழலை நடத்தும் அரசியலை எதிர்த்து போராடும் ஒரு தியாகியாக கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் 1996 இல் வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக முத்திரை பதித்தது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

இப்ப படத்தின் படப்பிடிப்புகள் மலேசியா, சிங்கப்பூர், துபாய், பாம்பே, டெல்லி, ஹைதராபாத் என பல பிரம்மாண்டமான இடங்களுக்கு சென்று படப்பிடிப்புகளை நடத்தி படத்தை மிக படத்தை பல கோடி பட்ஜெட்டில் பிரமிக்க வைக்கும் வகையில் எடுத்திருக்கிறார்கள். இப்ப படம் ஜூலை 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படியான நேரத்தில் படத்தை குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது, இந்தியன் 2 மற்றும் 3 படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது . அது என்னவென்றால், எஸ் ஜே சூர்யா இந்தியன் 2 படத்தில் வெறும் 20 நிமிட காட்சிகளில் நடித்துள்ளார். இந்தியன் 3 படத்தில் தான் எஸ் ஜே சூர்யா கமல் ஹாசன் இடையிலான காட்சிகள் பயங்கர மாஸாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.