திமுகவின் 100 இடங்களை TVK விஜய் கைப்பற்றுவார்: உளவுத்துறை REPORTல் ஸ்டாலின் குழப்பம் !

திமுகவின் 100 இடங்களை TVK விஜய் கைப்பற்றுவார்: உளவுத்துறை REPORTல் ஸ்டாலின் குழப்பம் !

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில், தி.மு.க.வின் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சுமார் 100 தொகுதிகளில், தற்போது விஜய்யின் த.வெ.க. கட்சி முன்னிலை வகிப்பதாக உளவுத்துறை அறிக்கை தயார் செய்து, முதலமைச்சர் ஸ்டாலினிடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் தான், தி.மு.க. தனது 5 அணிகளையும் அழைத்து, ஒரே இடத்தில் மந்திராலோசனை ஒன்றை நடத்தியுள்ளது. தி.மு.க.வில் மொத்தமாகவே 5 அணிகள் உள்ளன. அவை: உதயநிதி அணி, கனிமொழி அணி, துர்கா ஸ்டாலின் அணி, சபரீசன் அணி மற்றும் ஸ்டாலின் அணி. இவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, த.வெ.க.வால் வர உள்ள ஆபத்தை எப்படி தடுப்பது என்று ஆலோசிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

சென்னை ஆழ்வார்பேட்டையில், பெரும் நிலையம் ஒன்றை நிறுவி, அதில் ஐ.டி. அணி, பெண்கள் அணி, மீடியா அணி என்று பல்வேறு அமைப்புகளைச் செய்ய ஆரம்பித்துள்ளது தி.மு.க. இதில் எந்தக் காரணம் கொண்டும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது அணியைச் சேர்ந்த 40 பேரும் தேர்தலில் தோல்வியடையக் கூடாது என்பதில் ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய காலம் முதல் சில வாரங்கள் முன் வரை அவரை குறைவாகவே மதிப்பிட்டுள்ளது தி.மு.க. திருச்சியில் நடந்த அலப்பறையைப் பார்த்துதான் தி.மு.க. விழித்துக்கொண்டது. கே.என். நேருவின் கோட்டையை செங்கல் செங்கல்லாக பிரித்து மேய்ந்து விட்டார் விஜய்.

இன்னும் தாமதித்தால் பெரும் பாதகமான சூழ்நிலை தோன்றும் என்பதனை தி.மு.க. கணித்து விட்டது. த.வெ.க.வின் விஜய் அவர்கள், தி.மு.க. செய்யத் தவறிய விஷயங்களை அப்படியே பட்டியலிட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்.
தி.மு.க.வின் மீது குற்றம் சொல்ல பல நூறு விஷயங்கள் உள்ளன. ஆனால், இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இல்லாத விஜய் பற்றி தி.மு.க. பேச ஒன்றுமே இல்லை. இதனால் விஜய்யின் மாநாட்டில் ஒருவர் விழுந்து மண்டையை உடைத்தார், பொதுச் சொத்துக்கு சேதம், இவ்வாறு சில குற்றச்சாட்டுகளை மட்டுமே தி.மு.க.வால் முன் வைக்க முடிகிறது.

தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் தேவை, மன்னர் ஆட்சி ஒழிய வேண்டும், குடும்ப அரசியல் வேண்டாம் என்பது போன்ற கோஷங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், தி.மு.க.வின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அடுத்த விஷயம் நடந்துள்ளது.
அவர்களது தோழமைக் கட்சியான காங்கிரஸ், அடுத்து நடக்க உள்ள தேர்தலில் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள இடங்களை கோரவுள்ளது. அதுபோக ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கேட்க உள்ளது. இல்லையென்றால், த.வெ.க.வுடன் இணைய வாய்ப்புகள் உள்ளன. இதனால், தி.மு.க.வின் நிலை பெரும் கவலைக்கிடமாகவே உள்ளது.