தமிழ் பட இயக்குனர்களுக்கு என்ன தான் நடந்தது என்று தெரியவில்லை. ஷங்கர் ஆகட்டும், மணி ரத்தனம் ஆகட்டும் “கத்தி” போன்ற மெகா ஹிட் கொடுத்த இயக்குனர்கள் எல்லாருமே தற்போது காலாவதியாகி விட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்கள் கை வசம் கதைகள் இல்லை. ஆக்ஷன் படம் எடுக்கிறேன் என்று, வெறும் சண்டைக் காட்சிகளை வைத்தே முருகதாஸ் மதராஸி படத்தை எடுத்துள்ளார். அது மக்கள் மத்தியில் போய் செரவில்லை.
முதலாவது நாளே திரையரங்கில் பெரிதாக கூட்டம் இல்லை. படத்தை பார்த்த மக்கள், தமது உறவுகளுக்கு , நண்பர்களுக்கு என்ன சொல்கிறார்கள் என்பதனை வைத்தே தற்போது படம் வெற்றியடைகிறதா ? இல்லை தோல்வியடைகிறதா என்று தெரியும். ஆனால் மதராஸி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கதை எதுவும் இல்லை. இதனால் இளைஞர்கள் மட்டுமே படத்தை ரசித்தார்களே தவிர, பெண்கள் சிறுவர் மற்றும் நடுத்தர வயதான ஆண்கள் இந்தப் படத்தை ரசிக்கவில்லை.
இதனால் படம் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை. இது இவ்வாறு இருக்க TVK தலைவர் விஜய் நடித்து வெளியாக உள்ள “ஜனநாயகன்” படத்தை எப்படி என்றாலும், அதள பாதாளத்தில் தள்ளவேண்டும் என்று கருதிய ரெட் ஜயண்ட் நிறுவனம், விஜய் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடிக்கும் “பராசக்த்தியை” வெளியிட்டு மோத விட்டு வேடிக்கை பார்க்க குள்ள நரித் திட்டம் போட்டார்கள். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் திட்டவட்டமாக தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு விடையத்தை சொல்லி விட்டாராம்.
அதாவது எந்த விதத்திலும் அவசரப்பட வேண்டாம் என்று. பொங்கல் கழித்து, ஜனநாயகன் ஓடிய பின்னர் சோலோவாக பராசக்தியை வெளியிடுலாம் என்பதே சிவாவின் கருத்தாக உள்ளது. இது தான் விஜயின் ராசி என்பார்கள். தற்போது , விஜய் நடித்து வெளியாக உள்ள ஜனநாயகன் படத்திற்கு பெரிய அளவில் போட்டி எதுவும் இல்லை. ஆனால் , படத்தை தமிழ் நாட்டில் பிளாஃப் ஆக்க உதயநிதி எந்த ரேஞ்சுக்கும் இறங்குவார் என்று பேசப்படுகிறது. நடிகர் விஜயின் கடைசிப் படம் என்பதால், தமிழ் நாட்டில் ஜனநாயகன் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.