ஈரானின் மனித நாகரீகமே அழிந்து விடும் என ரம் மிரட்டியுள்ளதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் சற்று முன்னர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாங்கள் அண்டை நாட்டில் உள்ள அமெரிக்க தளங்களை தான் தாக்கி வருகிறோம். ஆனால் தனையும் தாண்டி தாக்குதல்களை தொடுக்க நேரிடும் என்று, சற்று முன்னர் ஈரான் அறிவித்துள்ளது. அதன் விளக்கம் அமெரிக்கா மீது நேரடியாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி தூர ஏவுகணைகளை ஏவுவோம் என்பது தான்.
இதில் முக்கியமான விடையம் என்னவென்றால், ஈரானிடம் சொந்த தயாரிப்பிலான 5,000Kம் தூரம் வரை செல்லும் ஏவுகணைகள் உள்ளது. இதனை அமெரிக்க வான் பாதுகாப்பு சிஸ்டம் இலகுவாக வானில் வைத்தே வெடிக்கச் செய்து அழித்து விடும். அது வேறு காதை. ஆனால் அந்த அமெரிக்க ஏவுகணைகள் ஒவ்வொன்றும் கோடிக் கணக்கில் பெறுமதியானவை. ஈரான் 50,000 ஆயிரம் டாலர் செலவு செய்து தயாரிக்கும் ஒரு ஏவுகணையை வீழ்த்த அமெரிக்கா 500,000 ஆயிரம் செலவு செய்யவேண்டி இருக்கும்.
அமெரிக்கா தனது ‘சிவப்பு கோடுகளை’ தாண்டி ஈரானின் சிவிலியன் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், அதன் விளைவுகள் பிராந்திய எல்லைகளைத் தாண்டி எதிரொலிக்கும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஈற்GC) அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை “பல ஆண்டுகளுக்கு” முற்றிலும் முடக்கிவிடுவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய எரிசக்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ள நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.இதுவரை தாங்கள் அண்டை நாடுகளுடனான உறவை முன்னிட்டு மிகுந்த பொறுமை காத்து வந்ததாகவும், ஆனால் இனி அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும் ஈற்GC தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடங்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளும் இலக்கு வைக்கப்படும் என்பதை ஈரான் வெளிப்படையாகவே உணர்த்தியுள்ளது. இது உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயரக்கூடும் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.இந்த மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் தனது பிடிவாதத்தை கைவிட்டு ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவில்லை என்றால் “ஒரு நாகரீகமே அழியும்” என்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். பதிலுக்கு ஈரானும் தனது ஏவுகணைப் படைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளதால், சர்வதேச சமூகம் மிகுந்த கவலையுடன் இந்த நகர்வுகளைக் கவனித்து வருகிறது