நண்பன் படத்தில் விஜய்க்கு பதில் நடிக்க இருந்த ஹீரோ இவர் தான்?

நண்பன் படத்தில் விஜய்க்கு பதில் நடிக்க இருந்த ஹீரோ இவர் தான்?

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஹீரோ என்று அந்தஸ்தில் இருக்கும் நடிகர் விஜய் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது

இப்படத்தில் படத்தில் விஜய்யுடன் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இணைந்து நடித்திருந்தார்கள். இந்நிலையில் தற்போது ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு பதிலாக முன்னதாக நடிக்க இருந்தது நடிகர் சூர்யாதானாம்.

ஆம், இந்த தகவலை சேத்தன் பகத் தனது டுவிட்டரில், கடந்த 2010ம் ஆண்டு… “இன்று மும்பையில் ஜிம்மில் தமிழ் சூப்பர் ஸ்டார் சூர்யாவை சந்தித்தேன். அவர் 3 இடியட்ஸ் தமிழில் நடிக்கிறார் என பதிவிட்டிருக்கிறார். 2010ம் ஆண்டு அவர் பதிவிட்ட டுவிட் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

athirvu