விஜய்யின் அக்கா மகளா இது? அதுக்குள்ள இம்புட்டு வளர்த்திட்டாரே – வைரல் வீடியோ!

விஜய்யின் அக்கா மகளா இது? அதுக்குள்ள இம்புட்டு வளர்த்திட்டாரே – வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பிகில். இத்திரைப்படம் பெண்களின் கால்பந்து விளையாட்டு மையப்படுத்தி எடுக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது .அட்லீ இயக்கத்தில் உருவாகிய திரைப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் தயாரித்திருந்தார் .

இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்ஷனை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஏ ஆர் ரகுமான இசையில் உருவாகியிருந்த பாடல்களும் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக இருந்து வருகிறது.

இப்படத்தில் விஜய் மைக்கேல் ராயப்பனாக சென்னை சேரில் பொதுநலனுக்காக பணியாற்றும் தாதாவாக இருந்து வந்தார். அவரது மகன் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இப்படத்தில் விஜய்யின் அக்கா மகளாக நடித்த குழந்தையின் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரல் ஆகுகிறது.

பிகில் படத்தில் மேரி என்ற குட்டி நட்சத்திர ரோலில் நடித்திருந்த பிரஜினா தற்போது புஷ்பா 2 திரைப்படத்தின் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை இணையத்தில் வெளியிட பிகில் படத்தில் பார்த்த குட்டி பெண்ணா இது? என இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.