திருமணம் ஆன 4 மாதத்திலே இப்படியா? பரிதாப நிலையில் ரகுல் ப்ரீத் சிங்!

திருமணம் ஆன 4 மாதத்திலே இப்படியா? பரிதாப நிலையில் ரகுல் ப்ரீத் சிங்!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை ஆன ரகுல் ப்ரீத் சிங் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னட மொழி தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்தார். முதன்முதலில் கன்னட திரைப்படமான கில்லி படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமாகி இருந்தார்.

தமிழில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாக அவர் மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரத்தை எடுத்தார்.

தமிழ் சினிமாவில் தடையறதாக என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். அதை அடுத்து என் ஜி கே, ஸ்பைடர் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாமனார் வாசு பக்னானி Pooja Entertainment என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் Bade Miyan Chote Miyan என்ற படத்தை சமீபத்தில் தயாரித்து இருந்தது. அந்த படம் உட்பட தயாரித்த படங்கள் அனைத்தும் சுமார் ரூ. 250 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் சம்பளம் கொடுக்கவே முடியாமல் அந்த நிறுவனம் திணறியதாக செய்தி வெளியானது.

மேலும் ஏராளமான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாகவும், 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடத்தையும் விற்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், நாங்கள் கட்டிடத்தை விற்கவில்லை அது வதந்தி என வாசு பக்னானி பேட்டி கொடுத்து இருக்கிறார்.