ஜான்வி கபூரின் “மிஸ்டர் & மிஸஸ் மாஹி” இத்தனை கோடி வசூல் ஈட்டியதா?

ஜான்வி கபூரின் “மிஸ்டர் & மிஸஸ் மாஹி” இத்தனை கோடி வசூல் ஈட்டியதா?

பாலிவுட் சினிமாவின் இளம் நடிகையான ஜான்விக் கபூர் தடக் திரைப்படத்தில் நடித்து நடிகையானார். மேலும், பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் அதிகம் நாட்டம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அவரின் அம்மா ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜான்வி கபூர் கோவில் கோவிலாக தரிசனம் செய்து வருகிறார். இதனிடையே இந்தி படங்களில் தொடர்ச்சியாக நடித்து அங்கு பிரபல நடிகையாக மார்க்கெட் பிடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் ஷரன் ஷர்மா இயக்கத்தில் மிஸ்டர் & மிஸஸ் மஹி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.இப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.