விவாகரத்து செய்கிறார் ஜெயம் ரவி…? தீயாய் பரவும் மனைவி ஆர்த்தியின் பதிவு!

விவாகரத்து செய்கிறார் ஜெயம் ரவி…? தீயாய் பரவும் மனைவி ஆர்த்தியின் பதிவு!

கோலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் பல அடுத்தடுத்து விவாகரத்து செய்து வரும் விவகாரம் பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது. தனுஷ் – ஐஸ்வர்யா, மற்றும் ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடியின் சமீபத்திய விவாகரத்து விவகாரங்கள் கோலிவுட் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டு சற்று ஆய்ந்து ஓய்ந்தது.

இப்படியான நிலையில் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி தற்பொழுது விவாகரத்தை நோக்கி இருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. ஆம் தற்போது ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் இருவரும் முறையாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நடிகர் ஜெயம் ரவி அமைதி காத்து வந்த நிலையில் அவரது மனைவி பதிலடி கொடுத்திருக்கிறார் அதாவது, ஜெயம் படம் வெளிவந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பயோவில் “Married to jayamravi” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலமாக விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் மனைவி ஆர்த்தி.