விவாகரத்து உறுதி செய்த ஜெயம் ரவி மனைவி…. காரணம் இதுதானாம்!

விவாகரத்து உறுதி செய்த ஜெயம் ரவி மனைவி…. காரணம் இதுதானாம்!

சமீப நாட்களாக கோலிவுட்டில் அடுத்தடுத்த விவாகரத்துகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் தனுஷ் – ஐஸ்வர்யா, மற்றும் ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடியின் சமீபத்திய விவாகரத்து விவகாரங்கள் கோலிவுட் முழுக்க பெரும் பரபரப்பாக பேசப்பட்டு சற்று ஆய்ந்து ஓய்ந்தது.

இப்படியான நிலையில் தற்போது பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த நடிகர் ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி ஜோடி தற்பொழுது விவாகரத்தை நோக்கி இருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் ஜெயம் ரவி உடன் இருந்த புகைப்படங்கள் அத்தனையும் டெலீட் செய்து விவாகரத்தை உறுதி செய்துள்ளார். இதற்கு காரணம் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தபோது பிரபல நடிகையுடன் நெருக்கமாக பழகியது தான் என கூறப்படுகிறது.