83 கோடி ரூபா கொடுத்து ஜஸ்டின் பீபரை திருமண விழாவில் வெறும் 45 நிமிடம் பாட வைக்கும் அம்பாணி !

83 கோடி ரூபா கொடுத்து ஜஸ்டின் பீபரை திருமண விழாவில் வெறும் 45 நிமிடம் பாட வைக்கும் அம்பாணி !

உலகின் மிகப் பெரிய செல்வந்தர் வரிசையில் இருக்கும் அம்பாணி, தனது மகன் திருமணத்திற்கு முன்னதாக இடம்பெறும் விழாவில், ஜஸ்டின் பீபரை பாட அழைத்துள்ளார். இதற்காக அவர் 83 கோடி ரூபா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது £8M மில்லியன் பவுண்டுகள் ஆகும். ஒரு நிகழ்ச்சி வெறும் 45 நிமிடம் தான் அவர் பாட உள்ளார். ஆனால் 8 மில்லியன் பவுண்டுகள். இந்த அளவு ஆடம்பரமாக திருமண விழாவை நடத்துகிறார் அம்பாணி.

மொத்தமாக ஆயிரத்தி ஐயாயிரம்(,1500) தொடக்கம் 2,000 கோடி திருமணத்திற்கு செலவுசெய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அட இவ்வளவு பணமா ? என்று பலரும் அதிர்ச்சிக்கு ஆளாகலாம். ஆனால் இந்த தொகை அவர் சொத்து மதிப்பின் வெறும் 0.01% விகிதம் தான் என்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அவரது சொத்து மதிப்பு 119 பில்லியனை தாண்டும் என்கிறார்கள். ஆனால் சரியான சொத்து மதிப்பை இதுவரை அம்பாணி வெளியிட்டதே இல்லை.

சமீபத்தில் தான் அவருடைய 2வது மகனின் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆனந்த் அம்பானி திருமணம் ஜூலை 12 தொடக்கம் ஜூலை 14 வரை மும்பாயில் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 24 பிரைவேட் ஜெட்டை, அம்பானி நிறுத்தி வைத்துள்ளார். மேலும் 250க்கு மேற்பட்ட சொகுசு ரக றோல்ஸ் றோயிஸ் கார்களையும் அவர் , நிலை நிறுத்தி வைத்துள்ளார். மும்பை வரும் அதிதிகளுக்கு, அந்த காரை பயன்படுத்த கொடுக்கிறார். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இதுபோல செலவு செய்து எந்த ஒரு செல்வந்தரும் திருமணம் செய்யவே இல்லை என்பது , பிரமிக்கத் தக்க விடையம்.

athirvu athirvu