அழகில் ஹீரோயின்களையே தூக்கியடிக்கும் கே. எஸ் ரவிக்குமார் மகள்!

அழகில் ஹீரோயின்களையே தூக்கியடிக்கும் கே. எஸ் ரவிக்குமார் மகள்!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் கேஎஸ் ரவிக்குமார். இவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி மிகப் புகழ் பெற்ற இயக்குனராக பார்க்கப்பட்டார். இயக்குனர் என்பதையும் தாண்டி திரைப்படங்களில் சிறப்பு தோற்றம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் பெரும் புகழ்பெற்றிருக்கிறார்.

குறிப்பாக இவரது இயக்கத்தில் வெளிவந்த சுந்திரபாண்டியன் , ஊர் மரியாதை, நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா , மின்சார கண்ணா, தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாக பார்க்கப்பட்டு உலக அளவில் சாதனையும் படைத்திருக்கிறது. வெற்றி இயக்குனராக சிறந்து விளங்கி வந்த கே எஸ் ரவிக்குமார் தற்போது திரைப்படங்களை இயக்குவதோடு குணச்சித்திர வேதங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கிவரும் இவர் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இதில் இவரது மகள் ஜஸ்வந்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில் அவர் பார்ப்பதற்கு டாப் ஹீரோயின்களே அழகில் மிஞ்சும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் நீங்கள் நிச்சயம் திரைப்படங்கள் நடிக்கலாம் அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என கூறி வருகிறார்கள்.