என் தாய்ப்பாலை கேரவனில் எடுத்து டிரைவரிடம் கொடுதேன் – காஜல் அகர்வால் பளீச்!

என் தாய்ப்பாலை கேரவனில் எடுத்து டிரைவரிடம் கொடுதேன் – காஜல் அகர்வால் பளீச்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

இவர் தமிழில் அஜித் விஜய் தனுஷ் சூர்யா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார் .

இந்நிலையில் தனது மகன் பிறந்த பிறகும் காஜல் அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அப்படி நடிக்கும் போது ஷூட்டிங்கில் தனது மகனை அழைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு செல்வேன். அந்த சமயத்தில் ஒரு முறை நான் குழந்தை பிறந்து இரண்டு மாதத்திலேயே ஷூட்டிங் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது . அதுவும், திருப்பதியில் அந்த ஷூட்டிங் நடந்தது மிகவும் வெப்பமான பகுதி அந்த இடத்திற்கு என்னுடைய குழந்தையை அழைத்துச் செல்ல முடியாது.

எனவே இரண்டு கிலோமீட்டர் தூர இடைவெளியில் ஒரு வீடு ஒன்றில் என்னுடைய அம்மாவையும் என்னுடைய குழந்தையும் தங்க வைத்துவிட்டு நான் ஷூட்டிங் கிளம்பி சென்று விடுவேன். நான் ஷூட்டிங்கில் இருந்து என்னுடைய தாய்ப்பாலை கேரவனில் கறந்து கொடுத்து டிரைவரிடம் அதை அனுப்பி வைத்தேன்.

இப்படியாக ஒவ்வொரு இரண்டு முறைக்கும் என்னுடைய டிரைவர் என்னுடைய தாய்ப்பாலை கொண்டு போய் என் குழந்தைக்கு கொடுத்துவிட்டு வருவார் . இப்படித்தான் நான் சூட்டிங்கில் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நடித்து வந்தேன். அந்த அளவுக்கு தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக அவசியம் என காஜல் அகர்வால் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.