“கல்கி 2898 AD” படத்தின் பிரம்மாண்ட வசூல்… முதல் நாளே இத்தனை கோடியா?

“கல்கி 2898 AD” படத்தின் பிரம்மாண்ட வசூல்… முதல் நாளே இத்தனை கோடியா?

நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட ரூ. 800 கோடி பட்ஜெட்டில் தயாராகி வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் “கல்கி 2898 AD”. இப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், பிரபாஸ் , கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் உலகம் முழுக்க நேற்று வெளியாகி பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது. திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் இந்த திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளே ரூ. 191.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மேலும் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸை தொடும் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் பிரபாஸின் முந்தைய படமான சலாரின் மொத்தம் ரூ. 620 கோடியையும், கல்கி 2898 AD முதல் வாரத்திலேயே கடந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.