Posted in

100 கோடி ‘டியூட்’ சர்ச்சை: “ஆபாசப் படமே மேல்” – கடுமையாக விமர்சித்த இயக்குநர் !

சமீபத்தில் வெளியாகி ₹100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நடிகர் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ திரைப்படம், திரையுலகில் தற்போது கடும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இப்படம் 2K கிட்ஸ் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், அதன் சர்ச்சைக்குரிய கதைக்களத்தை மையப்படுத்தித் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த முக்கியக் கலைஞர்கள் பலர் தங்கள் அதிருப்தியைக் கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

 பேரரசின் அதிரடி விமர்சனம்

ஊர்ப் பெயர்களை மையப்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பேரரசு, சமீபத்திய விழா ஒன்றில் ‘டியூட்’ படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையாகச் சாடினார்.

  • ‘கலைக்குச் செய்யும் துரோகம்’: “நல்ல படம் என்று சொல்லிவிட்டு, கலாச்சாரச் சீரழிவைக் காட்டுவது கலையுலகிற்கு நாம் செய்யும் துரோகம். அப்படி எடுத்துப் பிழைக்க நினைத்தால், வேறு தொழில் செய்யலாம்” என்று ஆவேசமாகக் கூறினார்.
  • ஆபாசப் படமே மேல்!: “கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் படங்களை எடுப்பதைவிட, ஆபாசப் படமாகவே எடுத்துவிட்டுப் போய்விடலாம். குறைந்தபட்சம் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து இளைஞர்கள் தடுக்கப்படுவார்கள். நல்ல படம் என்ற போர்வையில் சீரழிவைக் காட்டாதீர்கள்!” என்று அதிரடியாக விளாசினார்.
  • வசூல் மட்டுமே குறிக்கோளா?: ‘டியூட்’ படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் ₹100 கோடி வசூல் செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பேரரசு, “பணம் சம்பாதிக்க இது போன்றப் படங்களை எடுக்க வேண்டாம். அதற்கு வேறு வழி இருக்கிறது” என்றுத் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தினார்.

மற்ற கலைஞர்களின் குமுறல்

  • மீசை ராஜேந்திரன்: ‘வள்ளுவன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரன், ‘டியூட்’ படத்தை நேரடியாக விமர்சித்து, அதில் “கலாச்சார சீரழிவு” அதிகமாக இருப்பதாகக் கூறினார்.
  • சினிமா சமூகம்: இப்படம் குறித்து 2K கிட்ஸ் கொண்டாட்ட மனநிலையில் இருந்தாலும், திரைத்துறை சார்ந்த பலரும் இதன் கதைத் தேர்வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.