Posted in

“அஜித் சாருடைய பேஷன் எனக்கு இன்ஸ்பிரேஷன்!” பிப்ரவரியில் AK 64 ஷூட்டிங் ஆரம்பம்!

 பிப்ரவரியில் AK 64 ஷூட்டிங் ஆரம்பம்! – “அஜித் சாருடைய பேஷன் எனக்கு இன்ஸ்பிரேஷன்!” ஆதிக் ரவிச்சந்திரன் அப்டேட்!

நடிகர் அஜித்குமார் நடிக்கும் அடுத்தப் படத்தின் (தற்காலிகமாக AK 64) பணிகளைத் தாம் மிகுந்த பொறுப்புடன் மேற்கொண்டு வருவதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரனின் அப்டேட்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது மீண்டும் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் சினிஷ் தயாரிக்கும் ‘சூப்பர்ஹீரோ’ மற்றும் ‘நிஞ்சா’ படங்களின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட அவர், அஜித்தின் அடுத்த படம் குறித்துப் பேசினார்.

  • படப்பிடிப்பு தொடக்கம்: “புதிய படத்திற்கான ப்ரீ-புரொடக்சன்ஸ் (Pre-Production) பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. படத்திற்கான ஷூட்டிங் இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பிப்ரவரி மாதம் ஷூட்டிங் துவங்கும்” என்று ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

  • சிறப்புப் படம்: “அஜித் சாருடனான இந்த புதிய படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அந்தப் பொறுப்போடு வேலை செய்கிறோம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அஜித்தின் ‘பேஷன்’ குறித்துப் பாராட்டு

சினிமாவிற்கு வெளியேயான அஜித்தின் ஆர்வங்களைப் பற்றிப் பேசிய ஆதிக், அது தமக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறினார்.

  • பேஷன் இன்ஸ்பிரேஷன்: “சினிமாவைத் தாண்டி அவருடைய பேஷனை, ரொம்ப இன்ஸ்பயர் (Inspire) ஆக இருப்பதாக எல்லோரும் பார்க்கிறோம். நடிகர் அஜித் சினிமாவை எந்த அளவு நேசிக்கிறாரோ அதே அளவு அவருடைய பேஷன் ஐயும் நேசிக்கிறார். இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறார் அஜித்,” என்று இயக்குநர் புகழ்ந்து பேசினார்.

முன்னதாக, அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.