தளபதி விஜயின் கடைசிப் படமான “ஜன நாயகன்” இசை வெளியீட்டு விழா, வரும் 27ம் திகதி, மலேசியாவில் கோலாகலமாக இடம்பெறவுள்ள நிலையில். பத்திற்கு இசையமைத்துள்ள அனிருத் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜன நாயகன் இசை வெளியிட்டு விழா தெறியாக இருக்கும் என்றும், எந்த ஒரு அரசியல் தலையீடும் மலேசியாவில் இல்லை, மேலும் சொல்லப் போனால் விஜய் அவர்கள், மலேசியாவில் உள்ள எந்த ஒரு அரசியல் தலைவரையும் சந்திக்க மாட்டார் , இசை வெளியீட்டு விழாவுக்காக மாத்திரமே அவர் மலேசியா வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் அனிருத்.
விஜய் சாரோட ஜன நாயகன் படத்தின் ஆர் ஆர் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் சோகமாகவும் இருக்கு, விஜய் சாரோட கடைசி படம் இது . நான் தான் ரெம்பவும் இமோஷனலா இருக்கேன் என்று அனி மேலும் தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஓபன் ஸ்டேடியத்தில் ஜன நாயகன் பாடல்களை மட்டுமின்றி விஜய்யுடன் நான் பணியாற்றிய கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் என அனைத்து பட பாடல்களையும் ட்ரிப்யூட்டாக பாடப் போகிறேன் என அனிருத் கூறியுள்ளார்.
சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இந்த மலேசிய நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள நிலையில், உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு மாபெரும் சாதனை இங்கே நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கிண்ணஸ் உலக சாதனையில் இணைக்க, அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. கிண்ணஸ் உலக சாதனை அதிகாரிகள், மலேசிய வருவதற்க்கும், நிகழ்சியை அவதானிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் வெயிட்டிங்: நடிகராக விஜய்யின் கடைசி படம் மற்றும் கடைசி இசை வெளியீட்டு விழா என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். கண்டிப்பாக ஆடியோ லான்ச் முடியும் போது ஆயிரக் கணக்கான ரசிகர்களின் கண்கள் எல்லாம் கண்டிப்பாக குளமாகிவிடும் என்பது உறுதி என ரசிகர்கள் கூறுகின்றனர். அரசன் படத்தின் படப்பிடிப்பு இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. அது முடிய இன்னும் ஒரு வருஷம் ஆகிவிடும் என்று அந்த படத்தின் அப்டேட்டையும் அனிருத் கொடுத்துள்ளார். சிம்பு ரசிகர்கள் 2027ம் ஆண்டு வரை அரசன் வருகைக்காக காத்திருக்க வேண்டும்.