Posted in

இசையமைப்பாளர் …. ஹீரோவாக அவதாரம்! – முழு உடல் அமைப்பையும் மாற்றியதன் ரகசியம் இதுதானா?!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்… ஹீரோவாக அவதாரம்! – முழு உடல் அமைப்பையும் மாற்றியதன் ரகசியம் இதுதானா?!

தமிழ், தெலுங்குத் திரையுலகில் தனது துள்ளலான இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் (டி.எஸ்.பி.), தற்போது சினிமாவில் நாயகனாகவே அறிமுகமாகப் போவதாக வெளிவந்துள்ள தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன!

மெகா பட்ஜெட் படமாக ‘எல்லம்மா’!

தெலுங்கில் ‘பாலகம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த வேணு எல்டண்டி இயக்கத்தில், தில் ராஜு தயாரிக்கும் பிரம்மாண்டமான படம் ‘எல்லம்மா’. இந்தப் படத்தில்தான் டி.எஸ்.பி. ஹீரோவாக களமிறங்கப் போகிறார்.

முதலில் இந்தப் படத்திற்காக நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் போன்ற முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், கடைசியில் அந்த மெகா வாய்ப்பு இசைப் புயல் தேவி ஸ்ரீபிரசாத் கைக்குச் சென்றுள்ளது!

உடல் மாற்றி மிரட்டும் டி.எஸ்.பி.!

நடிகராக அறிமுகமாவதற்காக தேவி ஸ்ரீபிரசாத் சும்மா இருக்கவில்லை! தனது உடல் அமைப்பை முழுவதுமாக மாற்றி, புதிய தோற்றத்தில் நடிக்க தீவிரமாகத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இசைப் பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!

‘சச்சின்’, ‘மாயாவி’, ‘ஆறு’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘புஷ்பா’ போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களுக்கு இசையமைத்த டி.எஸ்.பி., நடிக்கும் ஆசையை ஏற்கெனவே சில நேர்காணல்களில் வெளிப்படுத்தி இருந்தார்.

அவரது நீண்ட நாள் ஆசை தற்போது ‘எல்லம்மா’ படத்தின் மூலம் நிறைவேறுகிறது! இசைத் துறையில் அசைக்க முடியாத சாம்ராஜ்யம் நடத்தியவர், நடிப்பிலும் கோலிவுட், டோலிவுட்டை கலக்குவாரா? திரையுலகம் ஆவலுடன் காத்திருக்கிறது!