Posted in

அஜித் திடீரென டாட்டூ குத்தக் காரணம் எதிரிகள் தொல்லையா? மூத்த பத்திரிகையாளர் அதிரடி விளக்கம்!

நடிகர் அஜித் குமார் தனது நெஞ்சின் வலது புறத்தில் ஒரு புதிய பச்சை (டாட்டூ) குத்தியிருக்கும் புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது. இந்த விவகாரம் தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்!

முதலில், நெட்டிசன்கள் மத்தியில், “அது என்ன சாமி? ஏலியன் உருவமா?” எனப் பலவித கேள்விகள் எழுந்தன. ஆனால், அஜித் குமார் தனது குலதெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மனின் உருவத்தைத் தான் நெஞ்சில் நிரந்தரமாகப் பொறித்துள்ளார் என்பது பின்னர் உறுதியானது.

இவ்வளவு நாளாக இல்லாமல், இப்போது திடீரென அஜித் பச்சை குத்தியதற்கான காரணம் என்ன?

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கும் விதமாக, மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் சில அதிர்ச்சிகரமான பின்னணி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

  • குலதெய்வ பக்தி: அஜித்தின் குலதெய்வம் கேரளாவிலுள்ள ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் தான். அவர் ஆரம்பத்திலிருந்தே இந்து மதத்தின் மீதும், குலதெய்வத்தின் மீதும் மிகுந்த பக்தி கொண்டவர். ஒரு காலத்தில் அவரை ‘சங்கி’ என கடுமையாக விமர்சித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
  • ஆபீஸில் ‘ஓம்’ சத்தம்: “அபிராமிபுரத்தில் உள்ள அவரது ‘ஏகே இன்டர்நேஷனல்’ அலுவலகத்தின் பின்பக்கத்தில் மிகப் பெரிய ‘ஓம்’ சின்னம் இருக்கும். அதிலிருந்து இடைவிடாமல் ‘ஓம்’ என்ற சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். டேபிளிலும் சாமி படங்கள் இருக்கும்,” என அஜித் மீதான பக்தி குறித்து பாலு கூறியுள்ளார்.
  • பச்சை குத்தியதற்குக் காரணம் எதிரிகள் தொல்லையா? சமீபகாலமாகவே அஜித்துக்கு எதிரிகள் தொல்லைகள் இருப்பதாகவும், அதனால் தான் ஆன்மீக ரீதியில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் செய்யாறு பாலு சந்தேகம் எழுப்பியுள்ளார்.

 பாலு மேலும் கூறுகையில், “ஆரம்பக் காலத்திலிருந்தே அஜித்துக்கு இந்தத் தொல்லை உள்ளது. ஒரு பெரிய நடிகரின் அப்பா, அஜித் சினிமாவுக்குள் வரக் கூடாது எனப் பல வேலைகள் பார்த்தார்கள். ஒரு குறிப்பிட்ட நடிகரின் அப்பா, அஜித்துக்குச் செய்வினை வைத்துவிட்டதாகக் கூட அப்போதெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், இதைப் பற்றி அஜித்திடமே சொன்னபோது, அவர் சிரித்துக்கொண்டே, ‘அப்படியெல்லாம் இருக்காது, நான் தான் உடம்பைச் சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை’ என்று கூறினாராம்.”

தனது நெஞ்சின் வலதுபுறத்தில் குலதெய்வத்தின் உருவத்தைப் பச்சை குத்தி, அதை வேண்டுமென்றே வெளியே தெரியும்படி அஜித் காட்டியதற்குக் காரணம், தனது குலதெய்வத்தின் மூலம் எதிரிகளின் தொல்லையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வது தான் என்று திரை வட்டாரங்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது!