Posted in

என்னது, அமரன் வெற்றிக்கு SK காரணமில்லையா? தயாரிப்பாளர் அதிரடி! 

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் (அக்டோபர் 31) ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில், அதன் மாபெரும் வெற்றி குறித்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

படம் 300 கோடி வசூல்: ஓராண்டு கொண்டாட்டம்!

  • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது ‘அமரன்’.
  • வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி, ஆக்‌ஷன் களத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
  • இந்தப் படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நான்கு வருடங்கள் கடும் உழைப்பைச் செலுத்தி, முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர், மனைவி இந்து ரெபாக்கா வர்கீஸ் ஆகியோரிடம் நேரடியாகக் கேட்டு கதையை உருவாக்கியிருந்தார்.
  • படம் வெளியாகி ₹300 கோடி வசூலைக் குவித்ததுடன், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய லாபத்தை ஈட்டித் தந்தது.

தயாரிப்பாளர் செந்தில் பாலாஜி போட்ட அணுகுண்டு!

இந்த நிலையில், ‘அமரன்’ படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயனைக் கொண்டாடுவது குறித்து பிரபல தயாரிப்பாளர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயனை மட்டும் கொண்டாடுவது சரியில்லை. படம் முடியும் 20 நிமிஷத்திற்கு முன்னாடியே சிவகார்த்திகேயன் (கதாபாத்திரம்) இறந்துவிடுவார். அதன் பிறகு அந்த 20 நிமிடங்கள் அந்தப் படத்தை தூக்கிப் பிடித்தது சாய்பல்லவிதான். அவரின் எமோஷனல் ஆக்டிங்தான் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

“உடனே சிவகார்த்திகேயனை எல்லாரும் தூக்கி கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. சாய்பல்லவி இல்லைனா அந்தப் படம் காலிதான்,” என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

‘அமரன்’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் மத்தியில், தயாரிப்பாளரின் இந்தக் கருத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.