கடும் தோல்வியை அடுத்து ரிஷி பதவி விலக மன்னர் சார்ளசை சந்திக்க உள்ளார் !

கடும் தோல்வியை அடுத்து ரிஷி பதவி விலக மன்னர் சார்ளசை சந்திக்க உள்ளார் !

நடந்து முடிந்த பிரித்தானிய தேர்தலில், லேபர் கட்சி மாபெரும் வெற்றியடைந்து, தனிப் பெரும்பாண்மையை விட மேலதிக ஆசனங்களை பெற்றுள்ளது, மொத்தமான 326 ஆசனங்களைப் பெற்றால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். ஆனால் லேபர் கட்சி சுமார் 400 இடங்களில் வெற்றியடைந்துள்ளது. இன்று ஜூலை 5 அல்லது நாளை, லேபர் கட்சித் தலைவர் கியர் ஸ்டாமர் பிரித்தானிய பிரதமராக பதவி ஏற்பார். இதேவேளை ரிஷி சுண்ணக் தொடர்ந்தும் கான்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

ரிஷி சுண்ணக் தனது கட்சித் தலைமைப் பொறுப்பை, துறப்பதாக இதுவரை அறிவிக்கவில்லை. எனவே அவர் எதிர்கட்சித் தலைவராக இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். ஏன் எனில் 14 வருடங்களாக வென்று கொண்டு வந்த கான்சர் வேட்டிவ் கட்சி MPக்களில் பலர் இம்முறை பதவியை இழந்துள்ளார்கள். இதனால் உட்கட்சி பூசல் வெடிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது.