47 வயசுன்னா நம்ப முடியுதா? மாடர்ன் லுக்கில் மயக்கும் மீனா!

47 வயசுன்னா நம்ப முடியுதா? மாடர்ன் லுக்கில் மயக்கும் மீனா!

நடிகை மீனா 90ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பெயர் எடுத்தார்.

ரஜினி , கமல் என தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வந்த மீனா பெங்களூரை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நைனிகா தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மீனாவின் கணவர் 2022 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து மீனா மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியிருக்கிறார். இந்நிலையில் தற்ப்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலிஷ் லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்தால் மீனாவுக்கு 47 வயசுன்னு சொன்ன நம்ப முடியுதா? என வியப்படைந்துள்ளனர்.