Posted in

“நாமக்கல் அரச விடுதி உணவு நஞ்சாக மாறியது” .. 500 கோடி அபேஸ்.. தவெக தளபதிக்குக் கிடைச்ச அல்வா துண்டு

“நாமக்கல் அரச விடுதி உணவு நஞ்சாக மாறியது” .. 500 கோடி அபேஸ்.. தவெக தளபதிக்குக் கிடைச்ச அல்வா துண்டு - Image 1

ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களில் திமுகவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டு இருக்காரு நம்ம தவெக தளபதி விஜய். இப்போ அவருக்கு இன்னும் ஒரு வெயிட்டான கண்டெண்ட் சிக்கியிருக்கு. அதாவது, அரசு விடுதியில் சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்காங்க. இது போதாதா? அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில் இந்த மேட்டரை வச்சு அணல் பறக்கப் போகுது. தேர்தல் நேரத்தில் திமுக அரசு இப்படி “கோட்டை விடும்” அப்படின்னு யாரும் எதிர்பார்க்கல. “என்னப்பா நடக்குது இங்க?” ரேஞ்சுக்கு ஒரு சம்பவம் நாமக்கல்லில் நடந்திருக்கு.

இது ஒரு பக்கம் இருக்க, தேர்தல் பறக்கும் படை செம ஃபார்மில் இருக்காங்க. ஆனா, அங்கேயும் நம்ம திமுக நிர்வாகிகள் குடங்கள், சில்வர் பாத்திரங்களை கடத்திட்டுப் போய் வசமா சிக்கியிருக்காங்க. இதுல ஹைலைட் என்னன்னா, இதுவரைக்கும் ரொக்கமாக 500 கோடி ரூபாயை பறக்கும் படை அள்ளியிருக்கு. இது எல்லாமே “உடன்பிறப்புகள்” பணம் தான்னு ஒரு பேச்சு ஓடுது. இதுக்கும் மேல “கிணறு தோண்ட பூதம் வந்த கதையா”, கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்துற குரூப்பும் சிக்கியிருக்கு. இது மட்டுமே ஒரு 100 கோடியைத் தாண்டும் போல! தளபதி விஜய் சொல்ற மாதிரி, தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் எந்த அளவுக்கு ஊடுருவியிருக்குங்கறது இப்போ கிரிஸ்டல் கிளியராத் தெரியுது.

நாமக்கல்லில் என்னதான் ஆச்சு?

நாமக்கல்-மோகனூர் ரோட்டில் இருக்கிற அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், நேத்து மதியம் சாப்பாடு சாப்பிட்ட 22 மாணவிகளுக்கு திடீர்னு வாந்தி, மயக்கம் வந்திருக்கு. விடுதியில் “சரக்கை” (உணவை) முடிச்சுட்டு ஸ்கூலுக்குப் போன 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கிற புள்ளைங்க, அடுத்தடுத்து மயங்கி விழுந்ததுல ஏரியாவே ரணகளமாகிடுச்சு. உடனே அந்தப் பிள்ளைகளைத் தூக்கிட்டுப் போய் நாமக்கல் அரசு மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காங்க.

இப்போதைக்கு எல்லாப் புள்ளைங்களும் “ஆல்ரைட்” ஆகி அபாயக் கட்டத்தைத் தாண்டிட்டாங்கன்னு ஆஸ்பத்திரி தரப்பு சொல்லுது. நியூஸைக் கேள்விப்பட்ட ஃபுட் சேஃப்டி ஆபீஸர்ஸ், விடுதியில் இருந்த சாப்பாடு மற்றும் தண்ணி சாம்பிள்களைத் தூக்கிட்டுப் போய் டெஸ்டுக்கு அனுப்பியிருக்காங்க. இது நிர்வாகத்தோட சொதப்பலா இல்ல உணவின் தரமான்னு போலீஸாரும் வருவாய்த் துறையினரும் செம ஸ்பீடா இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருக்காங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *