இரட்டை மகன்களுடன் போட்டோ ஷூட் – லேட்டஸ்ட் பேமிலி போட்டோஸ்!

இரட்டை மகன்களுடன் போட்டோ ஷூட் – லேட்டஸ்ட் பேமிலி போட்டோஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றியபோது அவருடன் நெருக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த காதலை ரகசியமாக பொத்தி பொத்தி கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக ரகசியமாகவே வைத்து காதலித்து வந்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல அவர்களின் காதல் பொதுவெளியில் தெரிய ஆரம்பித்தது. ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வந்தார்கள்.

பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக பல கோடி செலவு செய்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே நயன்தாரா வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். உயிர் ருத்ரனில் N சிவன் மற்றும் உலக் தெய்வீக N சிவன் என தனது மகன்களுக்கு பெயரை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் .

இந்நிலையில் தற்ப்போது தங்களது அன்பு மகன்களுடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்திய லேட்டஸ்ட் பேமிலி புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோஸ் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளது.