‘ஜெயிலர்’ வெற்றிக்கும் பின் உச்சத்தை தொட்ட நெல்சனின் சொத்து – எத்தனை கோடி தெரியுமா ?

‘ஜெயிலர்’ வெற்றிக்கும் பின் உச்சத்தை தொட்ட நெல்சனின் சொத்து – எத்தனை கோடி தெரியுமா ?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல இயக்குனராக இருந்து வருபவர் தான் நெல்சன் திலிப் குமார். இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கி பெரும் புகழ்பெற்ற இயக்குனராக பார்க்கப்பட்டார். இத்திரைப்படம் விருதுகளை குவித்ததை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார். பின்னர் தளபதி விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி பெரும் தோல்வி அடைந்து விட்டது.

இதனால் நெல்சன் மார்க்கெட்டில் சரிந்து விடுவார்… இனிமேல் யாரும் அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. மேலும், விருது விழாக்களில் கூட நெல்சன் அவமானப்படுத்தப்பட்டிருந்தார் .இப்படியான சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து டாக்டர் படத்தை இயக்கம் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதை மிக கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டு மாபெரும் வெற்றி கொடுத்தார். பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது ஜெயிலர் திரைப்படம். இந்த நிலையில் ஜூன் 21 ஆன இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் நெல்சனின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடிக்கும் மேல் இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.