போதைக்கு அடிமையாக விஜய்…. நிஜத்தில் இப்படியா? காறித்துப்பும் நெட்டிசன்ஸ்!

போதைக்கு அடிமையாக விஜய்…. நிஜத்தில் இப்படியா? காறித்துப்பும் நெட்டிசன்ஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக பல ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரப்படுகிறது. இதை வாங்கி அருந்திய கிட்டத்தட்ட 35 பேர் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கிறார்கள். இன்று காலை முதல் 9 மணி நிலவரப்படி இந்த பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது .

இதனால் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார் விஜய்.

விஜய்யின் இந்த பதிவினை பார்த்த நெட்டிசன்ஸ் பலபேர் நீங்கள் நடித்த மாஸ்டர் லியோ உள்ளிட்ட படங்களில் போதை பழக்கத்திற்கு அடிமையாக கிடக்கும் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு இப்படி அறிவுரை கூறுவது நியாயமா? நீங்கள் அப்படி நடித்தால் உங்களுடைய ரசிகர்களும் அப்படித்தானே செய்வார்கள். நீங்கள் வந்து இப்போது விளக்கம் கொடுக்க அருகதையே இல்லை என விஜய் பலரும் திட்டி தீர்த்த விமர்சித்து வருகிறார்கள்.