காதலை அறிவித்த நிவேதா தாமஸ்… யாருன்னு தெரியுமா?

காதலை அறிவித்த நிவேதா தாமஸ்… யாருன்னு தெரியுமா?

கேரளாவை சேர்ந்தவரான நடிகை நிவேதா தாமஸ் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தையாக நடித்திருக்கிறார். மேலும் மை டியர் பூதம் தொடரில் கூட சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

பின்னர் நிவேதா தாமஸ் ஹீரோயினாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். இந்த நிலையில், நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் “It’s been a while….. but. Finally!” என குறிப்பிட்டு ஹார்ட் சிம்பிள் உடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இவர் காதலித்து வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட்ஸில் கூறி வருகிறார்கள். மேலும் அந்த நபர் யார் என தேடத்துவங்கியிருக்கிறார்கள்.