உங்கள் அந்தரங்கத்தை பிரைவேட் கம்பெனிக்கு விற்கும் NHS உடனே தடுக்க என்ன செய்யவேண்டும் ?

உங்கள் அந்தரங்கத்தை பிரைவேட் கம்பெனிக்கு விற்கும் NHS உடனே தடுக்க என்ன செய்யவேண்டும் ?

பிரிட்டனில் உள்ள அனைவரும் GPயிடம் பதிந்து வைத்திருப்பார்கள் அல்லவா. அவர்களின் பெயரில் ஒரு டாகுமென்ட் இருக்கும். அதில் அனைத்து தரவுகளும் சேர்கப்பட்டு இருக்கும். நீங்கள் பிறந்த திகதி தொடக்கம், உங்களுக்கு உள்ள நோய், அதற்கு நீங்கள் எடுக்கும் மருந்து என்று சகல தரவுகளும் அதில் சேமிக்கப்பட்டு வரும். இந்த டேட்டாவை, தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பது என்று, NHS முடிவு செய்துள்ளது.

இதனூடா அவர்கள் பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்க. மருத்துவ ஆராட்சி செய்யும் நிறுவனங்களுக்கே நாம் இதனைக் கொடுக்கிறோம் என்று NHS கூறி தப்பிக்கப் பார்கிறது. அதாவது உங்கள் டேட்டாவை பிற தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தால், அது இன்ரர் நெட்டில் உங்கள் அந்தரங்க விடையத்தை போட்டதற்கு சமமாகிவிடும்.

இருப்பினும் உங்கள் தரவை(DATA) கொடுக்க உங்களுக்கு விரும்பம் இல்லை என்றால், நீங்கள் கீழ் காணும் அரச இணையத்தளம்(Gov webpage) சென்று அங்கே உங்கள் பெயர் பிறந்த திகதி போன்ற சில குறிப்புகளை கொடுத்து. இறுதியாக உங்கள் தரவுகளை பகிர எனக்கு விருப்பம் இல்லை என்ற பட்டணை (NO)அழுத்தினால். உங்கள் தரவை NHSல் கொடுக்க முடியாது.  தமிழர்கள் இதனை உடனே செய்வது நல்லது. ஜூன் 23 வரை தான் கால அவகாசம் இருக்கிறது. இந்தச் செய்தியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.  இங்கே கிளிக் செய்யவும்: https://your-data-matters.service.nhs.uk/