திருமணம் ஆகி ஒரு வாரத்தில் இப்படியா? பிரேம்ஜியின் பரிதாபநிலை – வீடியோ!

திருமணம் ஆகி ஒரு வாரத்தில் இப்படியா? பிரேம்ஜியின் பரிதாபநிலை – வீடியோ!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான பிரேம்ஜி நடிகர் ,இசையமைப்பாளர், பாடலாசிரியர் , பாடகர் இப்படி பண்முகம் கொண்டு சிறந்து விளங்கி வந்தார். இவர் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபுவின் தம்பி என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பார். கங்கை அமரனின் இளைய மகன். பிரேம்ஜி அமரன் 47 வயதாகியும் திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தனக்கு திருமணமே திருமணத்தில் விருப்பமே இல்லாதது போன்ற முரட்டு சிங்கிள் என்ற டீசர்ட்களை அணிந்து திருமணத்திற்கு அவ்வப்போது எதிர்ப்புகளையும் தெரிவிப்பார்.

இப்படியாக இருந்து வந்த சமயத்தில் திடீரென Instagram மூலமாக இந்து என்ற பெண்ணுடன் பழக ஆரம்பித்தார். அதன் பின்னர் காதலாக மாறி அண்மையில் திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் அவுட்டிங், ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார் பிரேம்ஜி. இந்நிலையில் பிரேம்ஜியின் மனைவி ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

அதில், பிரேம்ஜி சமையல் செய்து கொண்டிருக்கையில், முத்து படத்தில் இடம்பெறும் ’ஒரு காலத்துல எப்படி வாழ்ந்தவர்னு தெரியுமா’? என்ற டயலாக்கை வைத்து கணவரை கலாய்த்தபடி வீடியோவை எடிட் செய்து பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்து பலரும் பிரேம்ஜியை கிண்டல் செய்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.