பிறந்த கைக்குழந்தையுடன் ராஷிகண்ணா – வைரலாகும் புகைப்படம்!

பிறந்த கைக்குழந்தையுடன் ராஷிகண்ணா – வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகையான தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

பின்னர் தமிழில் அவர் நடித்த படம் சர்தார். அந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதே போல பாலிவுட்டில் விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த சீரிஸின் வெற்றியால் அவர் இந்தியா முழுவதும் அறிந்த நடிகையானார்.

கடைசியாக சுந்தர் சி யின் பேய்வரிசை படமான அரண்மனை 4 ல் ராஷிகண்ணா நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ராசி கண்ணா கையில் குழந்தை உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அது அவரது சகோதரருக்கு பிறந்த பெண் குழந்தை… அதனை வெளியிட்டு, “எங்கள் குடும்பம் இன்னும் கியூட் ஆகி இருக்கிறது. இளவரசி வந்திருக்கிறாள்” என குறிப்பிட்டு ராசி கண்ணா தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.