பிரபல அரசியல் புள்ளியின் நெருங்கிய உறவினரா ரம்யா கிருஷ்ணன் – ஷாக்கிங் தகவல் !

பிரபல அரசியல் புள்ளியின் நெருங்கிய உறவினரா ரம்யா கிருஷ்ணன் – ஷாக்கிங் தகவல் !

நடிகை ரம்யா கிருஷ்ணன் 80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வந்து கொண்டு இருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

வயது 53 வயதாகியும் இன்னும் தனது மார்க்கெட் குறையாமல் மவுஸ் குறையாமல் நட்சத்திர நடிகையாகவே பார்க்கப்பட்டு வருகிறார். இவர் வயதாகி ஹீரோயின் ரோல்கள் நடிக்கவில்லை என்றாலும் குணச்சித்திர ரோல்களில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக இவரது நடிப்பு ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல்கள் என்னவென்றால் நடிகை ரம்யா கிருஷ்ணன் மறைந்த பிரபல அரசியல் புள்ளியும் பழம்பெரும் நடிகர் சோ அவர்களின் தங்கை மகள் (தாய் மாமா) என்பது தான் உண்மை.