ரம்யா கிருஷ்ணனா இது? திருமணத்தின் போது எப்படி இருக்காங்க பாருங்க – வைரல் போட்டோ!

ரம்யா கிருஷ்ணனா இது? திருமணத்தின் போது எப்படி இருக்காங்க பாருங்க – வைரல் போட்டோ!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் வயது 53 வயதாகியும் இன்னும் தனது மார்க்கெட் குறையாமல் மவுஸ் குறையாமல் நட்சத்திர நடிகையாகவே பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் வயதாகி ஹீரோயின் ரோல்கள் நடிக்கவில்லை என்றாலும் குணச்சித்திர ரோல்களில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக இவரது நடிப்பு ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல்கள் என்னவென்றால் நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடினார் .

ஜூன் 12-ம் தேதி நேற்று திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணன் திருமணத்தின்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிஅது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கோடி கணக்கில் சொத்து வைத்திருக்கும் ரம்யா கிருஷ்ணனா அது இவ்வளவு சிம்பிளாக திருமணம் செய்து இருக்கிறாரே என அவரின் புகைப்படத்தை ரசிகர்கள் வியந்து ஷேர் செய்து வருகிறார்கள்.