எல்லா ஆம்பளையும் அப்படி இல்ல… ராஷ்மிகாவின் பதிவு வைரல்!

எல்லா ஆம்பளையும் அப்படி இல்ல… ராஷ்மிகாவின் பதிவு வைரல்!

நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் ராஷ்மிகா மந்தனா இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

க்ரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமாகி தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வந்தார் இதனிடையே தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

பின்னர் நேஷ்னல் கிரஷ் என்ற பட்டத்தை பெற்றதும் இந்தி சினிமாவில் இருந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க பிரபல நடிகரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

இந்த திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும். வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது அனிமல் பட காட்சியை ரசிகை ஒருவர் பதிவிட்டு ‘ஆண்களை நம்பவே கூடாது’ என பெண் ஒருவர் போட்ட ட்வீட்டுக்கு ராஷ்மிகா பதில் அளித்து இருக்கிறார்.”திருத்தம்: முட்டாள் ஆணை நம்புவது பயங்கரமானது.. பல நல்ல ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களை நம்புவது ஸ்பெஷல் தான்” என ராஷ்மிகா பதிவிட்டு இருக்கிறார்.