ஒரு வருஷத்துக்குள் டிவோர்ஸ்…. ரோபோ ஷங்கர் மகள் பகீர்!

ஒரு வருஷத்துக்குள் டிவோர்ஸ்…. ரோபோ ஷங்கர் மகள் பகீர்!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் ரோபோ ஷங்கர். மேடை சிரிப்புரை அறிஞராக தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.

இவரது டைமிங் காமெடி எல்லோரது கவனத்தை ஈர்த்தபோது விரைவிலே பிரபலமாகிவிட்டார். விஜய் தொலைக்காட்சியின் சொத்து என சொல்லக்கூடிய அளவுக்கு ரோபோ சங்கர் அந்த டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார்.

இதனிடையே இவர் தமிழ் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை குணசேத்திர வருடங்களிலும் காமெடி கதா காத்திரங்களிலும் நடித்தும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது மகள் இந்திரஜாவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்திராஜாவின் திருமண புகைப்படம் ஒன்றிற்கு நெட்டிசன் ஒருவர், இது வெறும் ஒரு வருஷம் தான் அப்புறம் விவாகரத்தாகிவிடும் என்று விமர்சனம் செய்துள்ளார். அதற்கு இந்திரஜா, இவங்களாம் டீசெண்ட்-ஆ போட்டிருக்காங்க, இதைவிட மோசமா இருக்கும், இவங்களும் ஒரு பொண்ணு தான்.

இப்படி பேசி பேசி வன்மத்தை கக்கும் அளவிற்கு மாறிவிட்டார்கள். இது தனிப்பட்ட முறையில் எனக்கு கஷ்டமாக இருந்தது. அதுவும் ஒரு பெண்ணாக இருந்துட்டு வன்மத்தை கக்குறீங்களே என்று எனக்கு கஷ்டம். ஒரு வருஷம் தான் சொல்றீங்கள்ல, சத்தியமா அப்படி நடக்காது, வாய்ப்பில்லை. நீங்கள் நினைப்பதைவிட நாங்கள் சூப்பராக வாழுவோம் என்று கூறியிருக்கிறார்.