உக்ரைன் போருக்கு மத்தியில், ரஷ்யா தனது ரகசிய ‘நிழல் படை’ (Shadow Fleet) மூலம் தடைகளை மீறி ஆயுதங்கள் மற்றும் எரிபொருளைக் கடத்தி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்த விரிவான செய்தித்தொகுபரஷ்யாவின் ‘நிழல் படை’ (Shadow Fleet) என அழைக்கப்படும் தடைகள் விதிக்கப்பட்ட சரக்குக் கப்பல்கள் மற்றும் அவற்றுக்குப் பாதுகாப்பாக வந்த ரஷ்யப் போர்க்கப்பல்களைப் பிரிட்டனின் அரச கடற்படை (Royal Navy) ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாகத் தீவிரமாகக் கண்காணித்து வழிநடத்தியுள்ளது. ரஷ்யாவின் ‘ரொபுச்சா’ (Ropucha) ரக தரைையிறங்கும் போர்க்கப்பல்களான ‘அலெக்சாண்டர் ஓட்ராகோவ்ஸ்கி’ மற்றும் ‘அலெக்சாண்டர் ஷாபாலின்’ ஆகியவை, தடைகள் விதிக்கப்பட்ட ‘ஸ்பார்டா IV’ மற்றும் ‘சபெட்டா’ ஆகிய சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றன. இந்த ரகசியக் கப்பல்களில் ரஷ்யா தனது போருக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை (War Stash) ஏற்றிச் செல்வதாகப் பிரிட்டன் பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது.
இந்த நடவடிக்கையைக் கண்காணிக்கப் பிரிட்டன் கடற்படையின் ‘எச்.எம்.எஸ் டைன்’ (HMS Tyne) என்ற போர்க்கப்பல் மற்றும் ‘வைல்ட்கேட்’ (Wildcat) ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஜிப்ரால்ட்டர் ஜலசந்தி முதல் வட கடல் (North Sea) வரை நேட்டோ (NATO) நாடுகளின் கூட்டு முயற்சியால் இந்த ரஷ்யக் கப்பல்கள் நிழல் போலத் தொடரப்பட்டன. “நாங்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்” என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா தனது எரிபொருள் மற்றும் ராணுவத் தளவாடங்களைக் கடத்தப் பழைய மற்றும் காப்பீடு இல்லாத கப்பல்களைப் பயன்படுத்துவது சர்வதேச கடல்சார் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ரஷ்யாவின் இந்த ‘நிழல் படை’ என்பது சுமார் 1,400-க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான வலையமைப்பாகும். மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து, ரஷ்யாவிற்குத் தேவையான வருவாயையும் ஆயுதங்களையும் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். சமீபகாலமாக இத்தகைய சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ரஷ்யா தனது போர்க்கப்பல்களைப் பயன்படுத்துவது, அதுவும் ஆங்கிலக் கால்வாய் போன்ற முக்கியமான சர்வதேசப் பாதைகளில் இத்தகைய நகர்வுகளை மேற்கொள்வது நேட்டோ நாடுகளை ஆத்திரமடையச் செய்துள்ளது. ஈரானிடம் இருந்து பெறப்படும் ஆயுதங்களும் இத்தகைய கப்பல்கள் வழியாகவே ரஷ்யாவிற்குச் சென்றடைவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தகைய ‘நிழல் படை’ கப்பல்களை நடுக்கடலில் தடுத்து நிறுத்திச் சோதனை நடத்தவும், தேவைப்பட்டால் பறிமுதல் செய்யவும் கடற்படைக்குச் சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளார். ஏற்கனவே மார்ச் மாத இறுதியில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் ரஷ்யாவின் சில எண்ணெய் கப்பல்களைப் பறிமுதல் செய்துள்ள நிலையில், பிரிட்டனின் இந்த அதிரடி முடிவு ரஷ்யாவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. வான்வெளி மற்றும் கடல்வெளி என இருமுனைகளிலும் ரஷ்யாவின் ஒவ்வொரு அசைவையும் நவீன ரேடார்கள் மூலம் கண்காணித்து வருவதாகப் பிரிட்டன் தெரிவித்துள்ளது. இந்தப் பதற்றம் ஐரோப்பிய எல்லைகளில் மற்றொரு போருக்கான வித்தாக அமையுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.