62 வயசு நடிகருடன் நடிக்க மறுத்த நயன்… வாய்ப்பை தட்டி தூக்கிய சமந்தா!

62 வயசு நடிகருடன் நடிக்க மறுத்த நயன்… வாய்ப்பை தட்டி தூக்கிய சமந்தா!

நடிகைகளை பொறுத்தவரை தான் திரையில் மிகவும் இளமையாக தெரிய வேண்டும் தனக்கான ஸ்கோப் இருக்க வேண்டும் கதையில் தனக்கு முக்கியத்துவம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரமாக தனக்கு இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் .

அதிலும் மிகவும் பிரபலமான நம்பர் ஒன் நடிகராக இருக்கும் நடிகைகள் இந்த விஷயத்தில் அதிக கவனத்தை கொண்டு இருப்பார்கள். அப்படித்தான் நடிகை நயன்தாரா கதை தேர்வில் அதிகம் கவனத்தை செலுத்துவதோடு தன்னுடைய கதாபாத்திரம் அழுத்தமானதாக இருக்கிறதா? என்று மட்டும் பார்த்து அதற்கேற்றார் போல் நடிப்பார் .

அப்படித்தான் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகரான மம்முட்டி ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னதாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது . அதன் பிறகு நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. காரணம் 62 வயது நடிகருடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

இந்த சமயத்தில் தான் சமந்தாவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்த அதற்கு சமந்தாவும் ஓகே சொல்லிவிட்டதாக தற்போது லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. வருகிற ஜூன் 15ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதாம். அதிரடி ஆக்சன் திரில்லர் கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் சமந்தா வேற லெவல் ரோலில் நடிப்பார் என கூறப்படுகிறது. எனவே படம் வெளியான பிறகு இந்த படத்தை தவற விட்டு விட்டோமே என நயன்தாரா மிகுந்த வருத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கிறது.

athirvu